Tuesday, June 2, 2015

சிறப்புச் செய்தி ( 02/06/2015 ) *



John Bosco G shared his photo.
28 mins ·

தமிழர்களே வரலாறு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது... தமிழ் நாடார்கள் பணத்திற்காகவோ அல்லது பெருமைக்காகவோ மதம் மாறவில்லை... ஒரு மீள் பதிவு...

தமிழர்களே வரலாறு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது... தமிழ் நாடார்கள் பணத்திற்காகவோ அல்லது பெருமைக்காகவோ மதம் மாறவில்லை... ஒரு மீள் பதிவு...
ஒன்பதாம் வகுப்பு சி....பி.எஸ்.இ சமூகவியல் நூலில் நாடார்களின் தோள் சீலை போராட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நாடார்கள் பணத்திற்காகவோ, பவுசிற்காகவோ மதம் மாறவில்லை.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பனியின் நேரடி வர்த்தகத்தை வேணாடடில் அனுமதிக்காததால், அவர்கள் எட்டு வீட்டு பிள்ளைமார்களுடன் சூழ்ச்சமமாக 1750-ல் அனந்தபத்மநாப நாடாரையும் பின்னர் 1758-ல் மன்னர் மார்த்தாண்டவர்மாவையும் கொன்றார்கள். பிறகு 1800-ல்தலைநகரை பத்மநாபபுரத்திலிருந்து அனந்தபுரத்திற்கு (தற்போதைய திருவனந்தபுரம்) மாற்றி துப்பாக்கி களுடன குமரிமண்ணில் வீரத்தலும், மருத்தவத்திலும், ஆன்மீகத்திலும் சிறந்தவர்களாக இருந்த நாடார்களை கொன்றுகுவித்தார்கள்.
மேலும் தென் திருவிதாங்கூர் (தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் தென் கொல்லம் மாவட்டங்கள்) சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் நாடார்கள் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த மலையாள நம்பூதிரி பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதி நாயர்கள் போதாக்குறைக்கு தமிழுக்கு துரோகமிழைத்து மலையாளத்தை ஏற்றுக்கொண்ட எட்டுவீட்டில் பிள்ளைமார்கள் ஆகியோரால் மிகவும் கேவலமாக நடத்தபெற்றனர்.
நாடார்கள் கல்வியிலோ அல்லது பொருளாதாரத்திலோ உயர்வு பெற இம்மூன்று சமூகத்தினரும் சம்மதிக்கவில்லை. தாங்கவண்ணா கொடுமைகளை இழைத்தனர். நம்பூதரி பார்ப்பனர் ஒருவரை நாடார் குளிக்கும் படித்துறை அருகே காண நேர்ந்தால் ஓடி தன்னை தானே ஒளித்துக்கொள்ள வேண்டும். எதிரில் பார்ப்பனர் வந்தால் நாடார் தன்னை அருகாமையில் இருக்கும் மரத்தின் பின்போ அல்லது குட்டிச்சுவரின் பின்போ மறைத்துக்கொண்டு பார்ப்பனருக்கு மரியாதை செய்யவேண்டும். ஒருவேளை தொலை தூரத்தில் பார்க்க நேர்ந்தால் முப்பத்தியாறு எட்டுக்களுக்கு அப்பால் விலகி நிற்க வேண்டும்.
பாருங்கள் கடவுளரின் பூமியில் சாதியின் பெயரால் 200 ஆண்டுகட்கு முன்பு நடந்த வெறியாட்டத்தை... நாயர்களின் ஆட்டமோ இன்னும் அதிகமானது. நாயர்களில் உயர் சாதி மற்றும் தாழ் சாதி நாயர்கள் என்று இரு வகையுண்டு. தாழ்சாதி நாயர்கள் தமிழ் வழித்தோன்றல் ஆவர், ஆனால் உயர் சாதி நாயர்களோ பார்ப்பனருடன் ஆரியதேசத்தில் இருந்து வந்து கேரளத்தில் குடியேறியவர் ஆவர். இவர்களுக்கு நேவர் என்ற பெயரும் உண்டு. இந்த நாயர்களை நாடார்கள் காண நேர்ந்தால் பதினெட்டு எட்டுக்களுக்கு அப்பால் தள்ளி நிற்க வேண்டும்.
இதைவிடக்கொடுமை என்னவென்றால் நாடார் பெண்டிர் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. திறந்த மார்போடு தான் கட்டாயம் இருக்கவேண்டும். கிறித்தவ நாடார் மகளிர் தோள் சீலையால் மறைத்துக்கொண்டால் நம்பூதரி பார்ப்பனர் அல்லது நாயரை காண நேரும்போது மரியாதை தரும் விதமாக அவர்களுக்கு தோள் சீலையை விலக்கி மார்பினை காட்டிட வேண்டும். மரியாதையை இப்படியா வாங்கிக்கொள்வது? ஏன் நாடார் மகளிருக்கு இருப்பதில் எதுவும் மேல் சாதி பெண்டிருக்கு இல்லையா? கொடுமைக்கு கொடுமையாக நாயர் சாதி வெறி பிடித்த ராணி பார்வதி பாய் , நாடார் பெண்டிருக்கு தோள் சீலை அணிவதற்கு எந்தவித உரிமையும் இல்லை என்று மனு நீதி வழங்கினார்!? அவரும் ஒரு பெண் தானே என்றால், ஆம் ஆனால் நாடார் பெண் இல்லையே.
இவற்றை எதிர்த்து அய்யா வைகுண்டர் கிளர்ந்து எழுந்தார். இவர்காலத்தில் நாடார்கள் பார்ப்பனர்க்கு உரிய பாதையில் செல்லக்கூடாது, குடை பிடிக்க கூடாது, பசு மாடு வளர்க்க கூடாது, உயர்சாதியினரை காணும் போது ஆண்கள் தலைப்பாகை கழற்றி இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும், பெண்கள் மார்பினை திறந்து காட்ட வேண்டும், எல்லாவற்றுக்கும் வரி கட்ட வேண்டும் என ஏக கட்டுப்பாடுகள். எனவே நாடார்கள் இப்படி பட்ட மனு நீதியும் தேவையில்லை அந்நீதியினை போதிக்கும் மதமும் தேவையில்லை என்று குடும்பம் குடும்பமாக, ஊர் ஊராக கிறித்தவ மதத்திற்கு மாறினார்.
மதம் மாறிய நாடார்களுக்கு வெள்ளையர் பாதுகாப்பு அளித்தனர். அய்யா வைகுண்டர் தனது அகில திரட்டு அம்மானை மூலம் தனது வழியை பின்பற்றியோருக்கு புரட்சி தீயினை ஊட்டினார். எல்லா மதமும் ஒன்றே எம்மதத்திலும் பேதம் இல்லை என்று சாதி வெறியினை சாடினார். இதனால் வைகுண்டர் திருவாங்கூர் மன்னரால் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் ஈழவர் மற்றும் நாடார் இன மக்களின் எழுச்சியால் விடுவிக்கப்பட்டார்.
இப்படி அம்மண்ணுக்கே உரித்தான நாடார் இன மக்களை பொய் புரட்டுக்கள் மூலம் ஆதிக்க வெறி பிடித்த சி.பி.எஸ்.இ வந்தேறிகள் எனவும் உயர் சாதி நாயர்களை தென் திருவாங்கூரின் மண்ணின் மைந்தர்கள் எனவும் புனைந்துள்ளது. வரலாறு வரலாறு தான்... மாற்ற நினைத்தால் இப்படித்தான் நடக்கும்.

No comments: