ஓணம் பண்டிகை வரலாறு!!!
ஓணம் பண்டிகை சேரநாட்டில் சூரியன் சிம்ம ராசியில் வீற்றிருக்கும் ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஓணம் பண்டிகை பிறந்த வரலாறு புராண காலத்தில் "மகாபலி" சக்ரவர்த்தி சேரநாட்டை ஆண்டு வந்தான். அவன் பிறப்பால் அசுர குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், தன் நாட்டு மக்களிடம் பேரன்பு காட்டினான். ஏராளமான தான, தர்மங்களை செய்தான்.... மகாபலி ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம். அப்போது சாதி இல்லை. எல்லா மக்களும் ஒன்றாகவே இருந்தனர். சண்டை இல்லை, சச்சரவுகள் இல்லை, ஏமாற்று வேலைகள் இல்லை, திருட்டு இல்லை. மக்கள் தங்களின் எல்லா தேவை களையும் பெற்றனர். மகிழ்ச்சியாக வாழ்ந் தனர். மகாபலி மன்னன் ஒரு மிகச்சிறந்த நீதிமானாக ஆட்சி செய்தான்.

தேவர்கள் இதைப் பார்த்து அஞ்சினர். "இந்த அசுரனை அழிக்க ஏதாவது செய்" என்று விஷ்ணுவிடம் வேண்டினர். அவரும் வாமனன் எனும் குள்ள பார்ப்பனனாக அவதாரமெடுத்து மகாபலியை அழித்தார்.
பாதாளத்தில் புதைக்கப்படும் முன்பு ஆண்டிற்கு ஒருமுறை என்னுடைய மக்கள் இப்போது போல எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்பதை நான் பார்க்க வேண்டும் என்று மகாபலி கேட்டார். அவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை அந்த மாமன்னன் தன் மக்களைப் பார்க்க வரும் நாளே ஓணம். ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு மகாபலியை வரவேற்கிறார்கள்.

No comments:
Post a Comment