Monday, April 11, 2022

ஈஸ்டர் 2022. *

உயிர்த்த    வசந்தப்    பண்டிகை !
----------------------------------------
சிலுவையில்    மரித்து
      குகையில்    புதைத்து
          உதிப்பில்    உயிர்த்து
              வேலையில்    இயேசு
விலைகளைக்    கொடுத்து
        மனுக்குலம்    மீட்டு
          சமாதானம்    சேர்த்து
            இயேசுவின்    தழும்பு !!
தீர்க்கன்    சொன்னது
      மூர்க்கம்   ஆனது
          உருக்கமாய்    இயேசு
            உறுதி     யெடுத்தது !
தீர்க்கர்பின்    அப்போஸ்தலர்
      விசுவாச    சபையானது
          விரிவதை    அறிகிறது
              ஆவியானவர்    ஆசிவந்து  !!
இருகால்    இயேசுவை
      ஒருகால்    சிலுவை
          தூக்கிய    தூக்கிலே
              சிலுவைகள்    நிக்குது !
இருதயத்துள்    சிலுவை
      இயேசுவின்   புகழை
          ஏற்றி    ஏற்றியே
              ஒத்தக்காலில்    நிக்குது !!
கோபுரத்துச்    சிலுவை
      கோவிலுக்கு    அழைக்குது
          கழுத்தில்    சிலுவை
             உரசி    உணர்த்துது !
கூடுகை    அழைப்பிதழ்
      உச்சத்தில்    சிலுவை
          குழந்தைக்கு    முதப்பரிசோ
              தங்கச்    சிலுவை !!
மரித்துப்    புதைத்து
      உயிர்த்து    எழுந்து
          உயர்ந்த    ஒரேநாள்
              ஈஸ்டர்    இந்தநாள் !
பற்றும்    பற்றாளர்
      மகிழ்ந்த    புதுநாள்
          முன்சொல்லி    பின்எழுந்த

              துளிர்போல்    தழைப்புநாள் !! 

No comments: